இடைவெளிக்குப் பின் ஒரே மேடையில் சம்பந்தன், சி.வி?

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனும் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனும் ஒரே மேடையில் பிரசன்னமாகவுள்ளனர்.

அந்த வகையில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று நடைபெறும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உரைகள் அடங்கிய ‘நீதியரசர் பேசுகிறார்’ என்ற நூல் வெளியீட்டு நிகழ்விலேயே இருவரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனும் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனும் ஒரே மேடையில் பிரசன்னமாகவுள்ளமையினால் இந் நிகழ்வு தமிழரசுக் கட்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகும்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !