இடைவிடாமல் அழுததால் பெற்ற குழந்தையை குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள சாண்ட்லர் என்ற இடத்தை சேர்ந்தவர் ஜென்னா போல்வெல் (19). இவருக்கு பிறந்த ஒரு மாதமே ஆன ஆண் குழந்தை இருந்தது.

அந்த குழந்தைக்கு ரெய்னர் என பெயரிட்டிருந்தனர். இந்த நிலையில் ஜென்னா போல்வெல் பரபரப்பாக போலீஸ் நிலையம் வந்தார். வீட்டில் தூங்கி கொண்டிருந்த தனது குழந்தையை யாரோ கடத்தி சென்று விட்டனர் என அழுது கொண்டே புகார் செய்தார்.

அதை உண்மை என நம்பிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது ஜென்னாவின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரிடம் தீவிரமாக விசாரிக்கப்பட்டது.

அப்போது அவர் தனது குழந்தையை குளியல் தொட்டியில் தண்ணீரில் அமுக்கி கொலை செய்ததாக தெரிவித்தார். மேலும் குழந்தை ரெய்னரின் உடலை ஒரு பெரிய ‘பேக்’கில் அடைத்து அதை அருகில் உள்ள பூங்காவில் வீசியதாக கூறினார்.

எனவே, ஜென்னாவை போலீசார் கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட குழந்தையின் உடலும் மீட்கப்பட்டது.

பெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி கொன்றது ஏன் என ஜென்னா போலீசில் வாக்குமூலம் அளித்து இருக்கிறார். அதில், புத்தகம் படித்துக் கொண்டிருந்த போது குழந்தை ரெய்னர் இடைவிடாது தொடர்ந்து அழுது கொண்டே இருந்தது.

இதனால் ஆத்திரம் அடைந்த ஜென்னா குழந்தையை குளியல் தொட்டியில் நிரம்பி இருந்த தண்ணீரில் அமுக்கி கொலை செய்ததாக தெரிவித்தார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !