இடைத்தேர்தலில் எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை தனித்து போட்டியிடும் – தீபா

மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிடப்போவதாகவும் தமது கட்சியில் இணைய விரும்வோர் மனு கையளிக்கலாமெனவும் எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளரான தீபா அறிவித்துள்ளார்.

அ.தி.மு.க மற்றும் தி.மு.க ஆகிய கட்சிகளுக்கிடையில் கடுமையான போட்டி தற்போதே ஆரம்பித்துள்ள நிலையில் தீபாவின் அறிவிப்பு தமிழக அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க.வில் அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்படுமென பரவலாக பேசப்பட்டது.

ஆனாலும், அவருக்கு அத்தகையதோர் வாய்ப்பு வழங்கப்படாததால் எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை என தனிக் கட்சியொன்றை ஆரம்பித்து அரசியல் பயணத்தை ஆரம்பித்தார்.

அந்தவகையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தீபாவின் வேட்புமனு தள்ளுபடியானதால் அதில் போட்டியிட முடியாமல் போனது.

இந்நிலையில் எதிர்வரும் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை தனித்து போட்டியிடுமென தீபா அறிவித்துள்ளார்.

மேலும் தனது கட்சி சார்பில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் விருப்புமனு கையளிக்கலாமெனவும் தீபா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.« (முந்தைய செய்திகள்)© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !