Main Menu

இசையமைப்பாளராக அறிமுகமாகும் பாடகர் சித் ஸ்ரீராம்

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ என்ற பிரமாண்டமான திரைப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் அவருடைய தயாரிப்பில் ‘வானம் கொட்டட்டும்’ என்ற திரைப்படம் உருவாகவுள்ளது.

இத்திரைப்படத்தில் மூலம் பாடகர் சித் ஸ்ரீராம் இசையமைப்பாளராக அறிமுகமாகின்றார்.

மணிரத்னம் கதை – திரைக்கதையில் உருவாகும் இந்த படத்தை அவருடைய உதவியாளர் தனசேகரன் இயக்கவுள்ளார்.

விக்ரம்பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன், சரத்குமார், ராதிகா, உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ள இந்த படத்தில்தான் பாடகர் சித் ஸ்ரீராம் இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளார்.

சித்ஸ்ரீராம் பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பல திரைப்படங்களுக்கு பாடல்களை பாடியிருந்தார்.

மணிரத்னம் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான ஏ.ஆர்.ரஹ்மான் இன்று உலகம் போற்றும் இசையமைப்பாளராக காணப்படுகின்ற நிலையில் அவருடைய அடுத்த படத்தில் சித் ஸ்ரீராம் இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளமை தற்போது எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.