இங்கிலாந்து- வேல்ஸ் முழுவதும் வெள்ளப் பெருக்கு: ஒரே இரவில் வீடுகளில் இருந்து வெளியேறிய மக்கள்!
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் முழுவதும் கிறிஸ்டோஃப் புயலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், மக்கள் ஒரே இரவில் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மன்செஸ்டரின் டிட்ஸ்பரி மற்றும் நார்தென்டென் பகுதிகளிலும், ருதின் மற்றும் பாங்கூர்-ஆன்-டீ, வடக்கு வேல்ஸ் மற்றும் மேகல், மெர்ஸ்சைட் ஆகிய இடங்களில் சுமார் 2,000 வீடுகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.
தற்போது 200க்கும் மேற்பட்ட வெள்ள எச்சரிக்கைகள் உள்ளன. அவற்றில் ஐந்து கடுமையானவை. மழை மற்றும் பனிக்கான வானிலை எச்சரிக்கைகளும் உள்ளன.
இதுதொடர்பாக பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கூறுகையில், ‘வெள்ளம் மற்றும் தொற்றுநோய்களின் இரட்டை நெருக்கடிகளுக்கு அரசாங்கம் முற்றிலும் தயாராக உள்ளது. வானிலை காரணமாக வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ள எந்தவொரு மக்களுக்கும் கொவிட் பாதுகாப்பான வசதிகள் கிடைக்கும்’ என கூறினார்.
இதேவேளை, பல ஆறுகள் ஆபத்தான உயர் மட்டத்தில் இருப்பதாக சுற்றுச்சூழல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பகிரவும்...