இங்கிலாந்து பிரதமர் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றம்
கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான பிரதமர், வைத்தியர்களின் ஆலோசனைக்கு அமைவாக, நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை லண்டனில் உள்ள செயின்ட் தொமஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சைக்கு உட்பட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று (06) பிற்பகலில், பிரதமரின் நிலை மோசமடைந்துள்ளதனை அடுத்து, அவரது மருத்துவக் குழுவின் ஆலோசனையின் பேரில், அவர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பகிரவும்...