Main Menu

இங்கிலாந்து குழு தாக்குதலில் 3 இந்தியர்கள் உயிரிழப்பு

இங்கிலாந்தில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்ட மூவரும் இந்தியர்கள் என லண்டன் போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் லண்டனின் கிழக்குப் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இருதரப்பினரும் வாள் மற்றும் கத்திகளுடன் சண்டையிட்டுக் கொண்டனர். இந்தத் தாக்குதலில் மூவர் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஸ்காட்லாந்து யார்டு போலீசார் விசாரணை நடத்தினர். அதில், கொல்லப்பட்ட 3 பேரும் இந்தியர்கள் என்றும், அவர்கள் நரேந்திர சிங் லுபாயா, ஹரீந்தர் குமார் மற்றும் மல்கித் சிங் தில்லான் என்ற பால்ஜிந்தர் சிங் என்பது தெரியவந்துள்ளது.

இவர்களின் உடல்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக குர்ஜித் சிங் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.