இங்கிலாந்தின் சிறுவர் பூங்கா ஒன்றில் 170 வெடி குண்டுகள் மீட்பு

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள சிறுவர் பூங்கா ஒன்றில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனில் உள்ள ஒரு சிறுவர் பூங்காவை விரிவாக்கம் செய்ய அரசாங்கம் முடிவு செய்தது .
அதன் ஒருபகுதியாக அண்மையில் பூங்காவில் குழி தோண்டும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இதன்போது அங்கு ஒரு வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் இது குறித்து காவல்துறையில் தகவல் அளித்தனர்.
மோப்ப நாய் உதவியுடன் காவல்துறையினர் அங்குச் சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
இதன்போது 170ற்கும் மேற்பட்ட வெடி குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அவற்றின் மொத்த எடை சுமார் 500 கிலோ கிராம் ஆகும்.
இதனையடுத்து அவற்றைச் செயலிழக்கச் செய்யும் பணியில் வெடிகுண்டு நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர்.