இங்கிலாந்தின் இறப்பு எண்ணிக்கை 1,829 ஆக அதிகரிப்பு!
கொரோனா வைரஸினால் பிரித்தானியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று (செவ்வாய்க்கிழமை) நிலவரப்படி 25,150 ஆக அதிகரித்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இதுவரை 1,829 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாகவும் இது 27% அதிகரிப்பு என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதுவரை கொரோனா வைரஸினால் ஸ்கொட்லாந்தில் 1563 பேரும் லண்டனில் 6521 பேரும் பாதிக்கப்பட்டுள்ளது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
