ஆஸ்திரேலிய உயர் தூதராக ஒருநாள் பதவி வகித்த கிராமத்துப் பெண்!

ஜார்கண்ட் மாநிலத்தில் நக்சலைட்களின் ஆதிக்கத்துக்கு இடையே பெண் கல்வி, பெண் சமத்துவம் போன்றவற்றுக்காக பாடுபடும் கிராமத்துப் பெண் ஆஸ்திரேலிய உயர் தூதராக ஒருநாள் மட்டும் பதவி வகித்துள்ளார்.

ஜார்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாரி சிங். 22 வயது இளம்பெண்ணான பாரி, நக்சலைட்களின் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் வாழும் பெண் குழந்தைகளின் கல்வி, சமத்துவம், சுதந்திரம் மற்றும் அதிகாரத்துக்காக சேவையாற்றியதன் மூலம் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தார்.

மேலும், பெண்களின் பாதுகாப்பு மற்றும் ஆபத்தான சூழ்நிலைகளை சமாளிக்கும் யுக்தி, அவசர உதவி எண்கள் ஆகியவற்றையும் விளிம்பு நிலையில் உள்ள பெண்களுக்கு இவர் நினைவூட்டி வந்தார்.

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !