ஆஸ்திரேலியாவின் பிரதமர் மீது முட்டை எறியப்பட்டது!
ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் மீது ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் முட்டையை எறிந்ததாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.
சம்பவம் இன்று நியூ சவுத் வேல்ஸ் மாநிலத் தேர்தல் பிரசாரத்தின்போது நிகழ்ந்தது.
முட்டையை வீசிய பெண்ணைப் பாதுகாப்பு அதிகாரிகள் பிடித்தனர்.
அதில் ஏற்பட்ட குழப்பத்தில் வயதான மாது ஒருவர் கீழே விழுந்தார்.
பிரதமர் மோரிசன் தம்மைப் பற்றிக் கவலைப்படாமல் கீழே விழுந்த மாதுக்கு உதவினார்.
தேர்தல் பிரசாரம் நடந்த எல்பரி மாவட்டத்தில் அரசாங்கத்தை விடத் தனியார் வேட்பாளர் ஒருவருக்கு மக்களிடையே அதிக செல்வாக்கு உள்ளது.
இதற்கு முன், மார்ச் மாதத்தில் நியூஸிலந்துப் பள்ளிவாசலில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நடந்ததற்குக் காரணம் முஸ்லிம் குடியேறிகளுக்கான திட்டம் என்று கூறிய செனட்டர் மீது இளையர் ஒருவர் முட்டையை எறிந்தார்.