ஆளுநரை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்!
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (புதன்கிழமை) சந்திக்கவுள்ளார்.
சென்னை ராஜ்பவனில் நடைபெறவுள்ள இந்த சந்திப்பில் தலைமை செயலர் இறையன்பு, மருத்துவ துறை செயலர் ஆகியோர் உடனிருக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவைக் கூட்டத்தில் உரையாற்ற ஆளுநருக்கு முறைப்படி அழைப்பு விடுப்பதற்காகவே இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக அரசு தரப்பு விளக்கமளித்துள்ளது.
அத்துடன் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்தும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பகிரவும்...