ஆறாம் வாரத்துக்கான மஞ்சள் ஆடை போராட்டத்துக்கான அழைப்பு

வரும் சனிக்கிழமை டிசம்பர் 22 ஆம் திகதி மீண்டும் மஞ்சள் மேலாடை போராட்டத்துக்கான அழைப்பு தற்போது முழு மூச்சாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
ஜனாததி இம்மானுவல் மக்ரோன் சில சலுகைகளை அறிவித்ததன் பின்னர், கடந்த சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தின் வீரியம் சரி பாதியாக குறைந்திருந்தது. இந்நிலையில், வரும் வாரமும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கிருஸ்துமஸ் நெருங்கியுள்ள இந்த நேரத்தில் <<acte 6>> ஆர்ப்பாட்டம் இடம்பெற உள்ளமை பெரும் நெருக்கடியாக இருக்கும் என தெரிவிக்கபட்டுள்ளது. வரும் டிசம்பர் 31 ஆம் திகதியும் ஆர்ப்பாட்டம் இடம்பெற உள்ளது.
கடந்த சனிக்கிழமை 66,000 ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடு முழுவதும் குவிந்திருந்தனர். வரும் வாரங்களில் ஆர்ப்பாட்டத்தின் தன்மை குறைந்திருந்தாலும், சோம்ப்ஸ்-எலிசே பகுதியை கிருஸ்துமஸ்துக்காக தயார் செய்வதில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !