ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களை இழந்து தடுமாறும் பாகிஸ்தான் அணி!

பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவடைந்துள்ளது.

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 262 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் தென்னாபிரிக்க அணி சார்பில் Aiden Markram 90 ஓட்டங்களையும், Theunis de Bruyn 49 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து தமது முதல் இன்னிங்ஸ்காக துடுப்பெடுத்தாட களம் இறங்கியுள்ள பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இரண்டு விக்கட்டுக்களை இழந்து 17 ஓட்டங்களை பெற்றுள்ளது.

போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளைய தினம் நடைபெறவுள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !