ஆயுதப்படைகளின் தொண்டு நிகழ்வுக்கான விருதுகளை வழங்கிய இளவரசர் ஹரி மற்றும் மேகன்!

பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் சீமாட்டி மேகன் மேர்க்கல் ஆகியோர் என்டெவொர் நிதியம் எனப்படும் ஆயுதப்படைகளின் தொண்டு நிறுவனம் ஒன்றுக்கான நிதியை திரட்டும் நிகழ்வின் போது முன்னாள் படையினருக்கு விருதுகளை வழங்கி வைத்தனர்.

இந்த நிதியத்தின் ஊடாக முன்னாள் முப்படையினருக்கும் நலன்புரி சேவைகளை வழங்கி வருகின்றனர். குறிப்பாக நோய்வாய்ப்பட்ட, காயமடைந்த மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட ஆண் பெண் இருபாலாருக்கும் இதனூடாக நிதியளிக்கப்படுகின்றது.

குறித்த நிதியத்தின் மூலம் புதிதாக ஹரி மற்றும் மேகன் ஆகியோரின் பங்களிப்புடன் ‘அரச குடும்ப நிதியம்’ ஒன்று நேற்று (வியாழக்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது நடத்தப்பட்ட தொண்டு நிகழ்வின் போது முன்னாள் படையினருக்கு கௌரவிப்பு விருதுகளும் வழங்கிவைக்கப்பட்டன.

இதேபோன்று, கடந்த 2012 ஆம் ஆண்டு இளவரசர் ஹரியின் சகோதரர் வில்லியம் மற்றும் அவரது பாரியார் கேட் ஆகியோரும் பல நிதியங்களின் பங்களிப்புடன் 86 செயற்றிட்டங்களின் ஊடாக 5,000 த்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு உதவியளித்துள்ளனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !