ஆயுதத்துடன் தொடரூந்து நிலையத்துக்குள் நுழைந்த நபர் காவல் துறையினரால் கைது!

ஆயுதத்துடன் தொடரூந்து நிலையத்துக்குள் நுழைந்த நபர் ஒருவர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவரால் எந்த ஆபத்துக்களும் ஏற்படவில்லை என்றபோது, பயணிகள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
தெற்கு பிரான்சின் Nimes நகர தொடரூந்து நிலையத்திலேயே நேற்று சனிக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. முன்னதாக ஆயுதங்களுடன் மூன்று நபர்கள் நிலையத்துக்குள் நுழைந்ததாக தெரிவிக்கப்பட்டு மிக பரபரப்பை ஏற்படுத்தியிருந்தாலும், பின்னர் ஒரு நபரே இவ்வாறு நுழைந்ததாக காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.  உடனடியாக குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார் எனவும், எவ்வித துப்பாக்கிப்பிரயோகமும் இடம்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவிர, தொடரூந்து நிலையத்தில் குவிந்திருந்த பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. காவல்துறையினரின் முழுமையான சோதனைகளுக்குப் பின் தொடரூந்து நிலையம் வழமைக்கு திரும்பியதாக இரவு 11 மணி அளவில் காவல்துறையினர் அறிவித்தனர்.

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !