ஆப்கானிஸ்தான் அரச அலுவலகத்தின் மீது கார்குண்டு தாக்குதல் – 19 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானின் கந்தஹார் மாகாணத்தில் அரச அலுவலகம் ஒன்றின் மீது தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய கார்குண்டு தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தானில் விரைவில் ஜனாதிபதி பதவி மற்றும் நாடாளுமன்றத்துக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ளன.
இதற்காக பல பகுதிகளில் புதிய வாக்காளர்களின் பெயர்களை சேகரிக்கும் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
இந்தநிலையில், நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள கந்தஹார் மாகாணத்துக்குட்பட்ட மரோப் மாவட்டத்தில் அரச அலுவலகத்தை குறிவைத்து தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நேற்றிரவு கார்குண்டுகளை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தினர்.
இதில் அந்த அலுவலகத்துக்குள் இருந்த தேர்தல் அதிகாரிகள் 8 பேர் உயிரிழந்தனர். அதே பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சமரில் பாதுகாப்பு படையை சேர்ந்த 11 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
பகிரவும்...