ஆப்கானிஸ்தானில் 12 குழந்தைகள் ஒரே நேரத்தில் புதுவித நோய் தொற்றினால் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானின் மருத்துவமனை ஒன்றில் 12 குழந்தைகள் ஒரே நேரத்தில் புதுவித நோய் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆப்கானிஸ்தானின் பன்ஷிர் மாகாணத்தில் உள்ள அவசர சிகிச்சைக்கான மருத்துவமனையிலேயே இவ்வாறு புதிதாக பிறந்த 12 குழந்தைகள் ஒரே நேரத்தில் உயிரிழந்துள்ள நிலையில் மருத்துவர்களால் இந்தக் குழந்தைகளின் உயிரிழப்புக்களுக்கான காரணத்தினை கண்டறிய முடியவில்லை.

உயிரிழந்த 12 குழந்தைகளிலும் ஒரே மாதிரியான நோய் தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பதாகவும், அந்த நோய் குறித்து ஆய்வு மேற்கொள்ள தலைநகர் காபுலில் உள்ள ஆராய்ச்சிக்கூடத்துக்கு ஆய்வு மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !