ஆப்கானிஸ்தானில் தேர்தல் பிரசார பேரணியில் தலிபான்கள் தாக்குதல் – 8 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்துக்கு வரும் 20-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் அங்கு பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

இந்நிலையில், நாட்டின் கிழக்கு பகுதியான ஹெல்மன்ட் மாகாணத்துக்குட்பட்ட  லஷ்கர் கா நகரின் அருகே சாலே முஹம்மது அச்சக்ஸாய்  என்ற வேட்பாளர் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டபோது தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவீச்சு  தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர்.

வேட்பாளர் சாலே முஹம்மது அச்சக்ஸாய்  உள்பட பலர் காயமடைந்தனர். காயமடைந்த சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !