ஆப்கானிஸ்தானில் காவல் நிலையம் மீது திடீர் தாக்குதல்- 6 பேர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தானின் ஹீரத் மாகாணம், புலே ரங்கினா பகுதியில் உள்ள காவல் நிலைய வளாகத்தினுள் நேற்று இரவு 3 பயங்கரவாதிகள் நுழைந்துள்ளனர். காரில் வந்து இறங்கிய அவர்கள், காவல் நிலைய வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் புகார் கொடுக்க வந்த பொதுமக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனால் பயந்து போன மக்கள் சிதறி ஓடினர்.

பயங்கரவாதிகளை நோக்கி சில போலீஸ்காரர்கள் துப்பாக்கியால் சுட்டு பதில் தாக்குதல் நடத்தினர். இதன் காரணமாக காவல் நிலைய வளாகம் போர்க்களமாக காட்சியளித்தது. இந்த சம்பவத்தில் 3 போலீஸ்காரர்கள், பொதுமக்கள் 2 பேர் மற்றும் ஒரு பயங்கரவாதி என 6 பேர் உயிரிழந்தனர். 3 போலீஸ்காரர்கள் காயமடைந்தனர்.
காவல் நிலையத்திற்குள் நுழைய முடியாமல் பின்வாங்கிய 2 பயங்கரவாதிகள், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அவர்கள் விட்டுச் சென்ற காரில் வெடிகுண்டு இருந்தது. அதனை சிறப்பு காவல் படையினர் செயலிழக்கச் செய்தனர். இந்த தாக்குதலுக்கு தலிபான் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.





© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !