ஆபத்தான நாடுகள் பட்டியலில் சவுதி! – ஐரோப்பிய ஆணையகம் நடவடிக்கை

பணமோசடி தொடர்பான ஆபத்தான நாடுகள் பட்டியலில் சவுதி அரேபியா மற்றும் பனாமாவை போன்ற நாடுகளை உள்ளடக்குவது தொடர்பாக ஐரோப்பிய ஆணையகம் ஆலோசித்து வருகின்றது.

பணச்சலவை விடயத்தில் இந்நாடுகள் தோல்வியடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள ஐரோப்பிய ஆணையகம், அதன் கறுப்புப் பட்டியலில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகின்றது.

ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவின் எதிர்ப்புகளை தாண்டி ஐரோப்பிய ஒன்றியம் இந்நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக தி பினான்ஸியல் ரைம்ஸ் பத்திரிகை இன்று (வெள்ளிக்கிழமை) செய்தி வெளியிட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பறிமாற்றங்கள் மற்றும் பணமோசடிக்கு எதிராக போராட தவறியமை தொடர்பாக 20இற்கும் மேற்பட்ட நாடுகள் இந்த பட்டியலில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் குறித்த பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.

ஐரோப்பிய ஆணையக உறுப்பினர்களை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !