ஆந்திர சிறப்பு அந்தஸ்து விவகாரம்: சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம்!

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காத மத்திய அரசை கண்டித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்துள்ளார்.

டெல்லியில் உள்ள ஆந்திரா பவன் வளாகத்தில் நாளை காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரை நடைபெறும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளார்.

குறித்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டசபை உறுப்பினர்கள், ஆந்திர மாநில அரசு பணியாளர்கள் சங்கங்களை சேர்ந்த தலைவர்கள் மற்றும் அம்மாநிலத்தின் மாணவர் சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.

இந்த உண்னாவிரதப் போராட்டத்தின் பின்னர் நாளை மறுநாள் இதே கோரிக்கையை வலியுறுத்தி ஜனாதிபதியை நேரில் சந்தித்து சந்திரபாபு நாயுடு மகஜர் ஒன்pனைக் கையளிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !