ஆட்சி அமைக்க அழைத்தால் சிறந்த தீர்மானம் எடுப்போம் – த.தே.கூ நிலைப்பாடு

ஆட்சி அமைக்க அழைத்தால் சிறந்த தீர்மானத்தை எடுப்போம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தனி அரசாங்கம் அமைப்பது தொடர்பில் பேச்சுக்கள் ஏதும் முன்னெடுக்கப்பட்டனவா என்பது தொடர்பில் கொழும்பு தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு கருத்து தெரிவித்த போதே மாவை சேனாதிராஜா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியுடனே வேறு எந்த கட்சியுடனுமோ இணைந்து ஆட்சியமைக்க இதுவரை தமது கட்சிக்கு எவ்வித அழைப்பும் விடுக்கப்படவில்லை எனவும் அரசாங்கம் இது தொடர்பில் அழைப்பு விடுக்கும் பட்சத்தில் சிறந்த தீர்மானமொன்றை எடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனி அரசாங்கம் அமைப்பது தொடர்பில் அழைப்புக்கள் விடுக்கப்படுமாயின் , எமது கட்சியின் மத்திய செயற்குழு கூடி இது தொடர்பில் இறுதித் தீர்மானமொன்றினை மேற்கொள்ளும் எனவும்; அவர் தெரிவித்தார்.

இலங்கையின் அரசியல்நிலைப்பாட்டில் தற்போது நிலவிவரும் அரசியல் நிலைவரங்களின் அடிப்படியில் ஐக்கிய தேசியக்கட்சியின் தனி அரசாங்கம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கும் என்று கூறப்படும் நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் நிலைப்பாடு இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது,


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !