ஆசிய கிரிக்கெட் தொடர்: இலங்கை – ஆப்கானிஸ்தான் இன்று மோதல்

ஆசிய கிரிக்கட் தொடரின் தீர்க்கமான போட்டியில் இலங்கை அணி இன்று (திங்கட்கிழமை) ஆப்கானிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அணியை குறைத்து மதிப்பிடக் கூடாதென, இலங்கை அணியின் இளம் வீரர் நிரோஷன் டிக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.

ஆசிய கிண்ணத் தொடரில் முதல் போட்டியில் பங்களாதேஷ் அணியிடம் தோல்வியடைந்த இலங்கை அணி, இன்றைய போட்டிக்காக கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றது.

இந்த போட்டியில் தோல்வியடைந்தால், தொடரிலிருந்து வெளியேற வேண்டிய நிலையில், மிகவும் இக்கட்டான நிலையில், இலங்கை அணி இன்றைய போட்டியில் கமிறங்கவுள்ளது.

இந்நிலையில், எதிரணியான ஆப்கானிஸ்தான் அணியை குறைத்து மதிப்பிடக் கூடாதென, இலங்கை அணியின் இளம் விக்கட் காப்பாளர் நிரோஷன் டிக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஆசிய கிண்ணத் தொடரில் தங்கள் முதல் போட்டிக்காக தயாராகி வரும் ஆப்கான் அணியும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றது.

இந்த போட்டியில் இலங்கை அணியை வெற்றிகொண்டு நெருக்கடியைத் தவிர்க்க அவர்கள் கடுமையாக முயற்சிப்பார்கள் என்றும் நம்பப்படுகின்றது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !