ஆங் சான் சூகி மீது இலஞ்சம்- முறைகேடு குற்றச்சாட்டு: 15 ஆண்டுகள் சிறைவாசம்
மியன்மாரில் ராணுவத்தால் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட தலைவர் ஆங் சான் சூகி மீது இலஞ்சம் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
அவருக்கு எதிராக இலஞ்சம் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டு பதிவு செய்யப்படால் அவரை 15 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்க முடியும் என்று கூறப்படுகிறது.
தனது ஆட்சிக் காலத்தின்போது ஆங் சான் சூகி தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தி வீட்டு மனை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாகவும் கண்டறியப்பட்டுள்ளது
ஏற்கனவே, ஏற்கெனவே, சட்டவிரோதமாக தகவல் தொடர்பு சாதனங்களை இறக்குமதி செய்து வைத்திருந்ததாக அவர் மீது இராணுவ ஆட்சியாளர்கள் குற்றச்சாட்டு பதிவு செய்திருந்தனர்.
அத்துடன், கொரோனா விதிமுறைகளைக் கடைபிடிக்காததன் மூலம் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் 25-ஆவது பிரிவை மீறியதாக ஆங் சான் சூகி மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த பொதுத்தேர்தலில் மோசடி நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டி, ஆட்சிக்கவிழ்ப்பை நியாயப்படுத்திக் கொண்டிருக்கும் மியன்மார இராணுவம், நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, ஜனாதிபதி வின் மைண்ட் உட்பட ஆளும் கட்சியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட தலைவர்களை கைது சிறை வைத்துள்ளது. அதுமட்டுமின்றி நாடு முழுவதும் ஓராண்டுக்கு அவசரநிலையை இராணுவம் அறிவித்துள்ளது.
இராணுவத்தின் இந்நடவடிக்கைக்கு எதிராக மக்கள் பலர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். ஆனால், போராட்டத்தைக் கடுமையான நடவடிக்கைகள் மூலமாக இராணுவம் ஒடுக்கி வருகிறது.
தற்போதுவரை மியன்மாரில் இராணுவத்துக்கு எதிரான போராட்டத்தில் 800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.