ஆங் சான் சூகியின் ஆலோசகரை கொலை செய்த இரண்டு பேருக்கு மரண தண்டனை!

மியன்மாரில் அரச தலைவர் ஆங் சான் சூகியின் ஆலோசகரும், இராணுவ சட்டபூர்வமான அரசியலமைப்பை சீர்திருத்துவதற்கான ஒரு வழக்கறிஞரை கொலை செய்த குற்றச்சாட்டில் இரண்டு பேருக்கு நீதிமன்றத்தினால் மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கோ நீ என்ற 63 வயதான குறித்த வழக்கறிஞரை கடந்த இரண்டு வருடங்களுக்கான முன்னர் யாங்கொன் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் அவர்கள் இருவருக்கும் இன்று (வௌ்ளிக்கிழமை) இந்த தீர்ப்பு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரைக் காலமும் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர்கள் இருவரும், இன்று மிகுந்த பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.

கடந்த பல ஆண்டுகளாக நிலவிய இராணுவ ஆட்சிக்கு பின்னர் மியன்மாரின் ஜனநாயகத்தில் ஏற்பட்ட மாற்றம் தொடர்பில் இந்த சம்பவம் அதிக கவனத்தை தூண்டியது.

யாங்கொன்னின் வடக்கு மாகாண நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட துப்பாக்கிதாரியான கீ லின் மற்றும் அவரை பணிக்கு அமர்த்திய முன்னாள் இராணுவ அதிகாரி ஆங் வின் ஷாவ் ஆகியோரே சட்டத்தரணி கோ நீ-யை கொலை செய்த குற்றச்சாட்டில் தண்டனை பெற்றதாக நீதிபதி யே லிவின் தெரிவித்தார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !