அ.தி.மு.க சார்பில் விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் ஆரம்பம்

தமிழக தேர்தல் களம் தீவிரமடைந்துள்ள நிலையில் அ.தி.மு.க. சார்பில் விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டு வருகின்றது.

குறித்த நேர்காணல் சென்னை ராயப்பேட்டை அலுவலகத்தில் இன்றும், நாளையும் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி இன்றைய தினம் 20 தொகுதிகளுக்கு நேர்காணல் நடத்தப்படவுள்ள அதேவேளை, நாளைய தினம் 19 தொகுதிகளுக்கு நேர்காணல் நடத்தப்படவுள்ளது.

மேலும் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. வுக்கு 7 தொகுதிகளும், பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகளும், தே.மு.தி.க. வுக்கு 4தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், புதிய தமிழகம், புதிய நீதிகட்சி மற்றும் என்.ஆர் காங்கிரஸ் ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !