அ.தி.மு.க கூட்டணி தொகுதிகளின் முழு விபரம் அறிவிப்பு

அ.தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளின் விபரங்களை துணை முதல்வர் ஓ.பின்னீர்செல்வம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் மொத்தம் 8 கட்சிகள் இடம் பெற்றுள்ளன. மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் அதிமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. மீதமுள்ள 20 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. பா.ஜ.கவுக்கு 5, தே.மு.தி.கவுக்கு 4 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன.

த.மா.கா, புதிய தமிழகம், புதிய நீதி கட்சி, என்.ஆர் காங்கிரஸ் ஆகிய 4 கட்சிகளுக்கும் தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு தொகுதிகள் பட்டியலை வெளியிட்டனர்.

அதன்படி அ.தி.மு.க போட்டியிடும் தொகுதிகள் விபரம், சேலம், நாமக்கல், கிருஷண்கிரி, ஈரோடு, கரூர், திருப்பூர், பொள்ளாச்சி, ஆரணி, திருவண்ணாமலை, சிதம்பரம், பெரம்பலூர், தேனி, மதுரை, நீலகிரி, திருநெல்வேலி, நாகை, மைலாடுதுறை, திருவள்ளூர், காஞ்சீபுரம், சென்னை தெற்கு.

பா.ம.க போட்டியிடும் தொகுதிகள் விபரம், தர்மபுரி, விழுப்புரம், அரக்கோணம், கடலூர், மத்திய சென்னை, திண்டுக்கல், ஸ்ரீபெரும்புதூர்.

பா.ஜ.கா போட்டியிடும் தொகுதிகள், கன்னியாகுமரி, சிவகங்கை, கோவை, ராமநாதபுரம், தூத்துக்குடி.

தே.மு.தி.க போட்டியிடும் தொகுதிகள், கள்ளக்குறிச்சி, திருச்சி, சென்னை வடக்கு, விருதுநகர்.

என்.ஆர் காங்கிரஸ் புதுச்சேரியிலும், த.மா.க தஞ்சாவூரிலும், புதியநீதிக்கட்சி வேலூரிலும், புதியதமிழகம் தென்காசியிலும் போட்டியிடுகின்றன.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !