அ.தி.மு.க ஆட்சி மன்றத்தின் குழு கூட்டம் நாளை!

திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர் தொடர்பில் அறிவிக்கும், அ.தி.மு.க. ஆட்சி மன்றத்தின் குழு கூட்டம் நாளை (சனிக்கிழமை) நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கூட்டம் இன்று நடைபெறுமென அ.தி.மு.க அறிவித்திருந்த நிலையில் தீடீரென இரத்து செய்யப்பட்டுள்ளது.

தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதி மறைவால் திருவாரூர் தொகுதியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளமையால் இடைத்தேர்தலுக்கான திகதியை தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் 3 ஆம் திகதி  தொடங்கி 1 ஆம் திகதி வரை நடைபெறுமெனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், எதிர்வரும் 28 ஆம் திகதி வாக்குப்பதிவும்  31 ஆம் திகதி வாக்கு எண்ணும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுமென தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !