அவுஸ்ரேலியாவில் விமானச் சேவைகள் பாதிப்பு!
அவுஸ்ரேலியாவில் விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
கணினி கட்டமைப்பு செயலிழந்துள்ளமை காரணமாகவே விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடவுச்சீட்டு சோதனை இயந்திர கட்டமைப்பே இவ்வாறு செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்காரணமாக அவுஸ்ரேலியாவிலுள்ள அனைத்து விமான நிலையங்களிலும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இந்தநிலையில் கணினி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறினை சரி செய்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.