அவுஸ்ரேலியாவில் காட்டு தீ: 24 மணி நேரத்தில் 100 தீபரவல் பதிவானது

அவுஸ்ரேலியாவில் கட்டுக்கடங்காத வகையில் காட்டு தீ பரவியுள்ள நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு படையினர் தீயணைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் அவுஸ்ரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் குறைந்தபட்சம் 100 தீ பரவல் ஏற்பட்டுள்ளன. அவசரகால எச்சரிக்கைகளும் வழங்கப்பட்டுள்ளன.

இரு தீபரவல் ஒன்றாக இணையும் சந்தர்ப்பத்தில் கடுமையான தீ சுவாலை ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான தீ பரவலால் தென்கிழக்கு மெல்பர்ன் பகுதியில் இருந்து 100 கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஸ்டேட் பார்க்கில் பாரிய தீ பரவல் உண்டாகியுள்ளது.

எவ்வாறாயினும் எந்தவொரு சொத்துகளும் தீக்கிரையாக்கப்படவில்லை என விக்டோரியாவின் அவசரகால முகாமைத்துவ ஆணையாளர் ஆண்ட்ரூ க்ரிஸ்ப் கூறியுள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !