அவுஸ்ரேலியாவில் கடும் வெள்ளம்: ஆயிரக் கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்!
அவுஸ்ரேலியாவில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சிட்னியின் மேற்கே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், அங்கு இதுவரை 18,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் 15,000பேர் செவ்வாய்க்கிழமை வெளியேற்ற அறிவிப்பில் இருந்தனர்.
நியூ சவுத் வேல்ஸின் சில பகுதிகள் கிட்டத்தட்ட 1 மீ (3.2 அடி) மழையைக் கண்டன, நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் சிக்கின.
சிட்னி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பாதிப்பு மோசமாக உள்ளது. அங்குள்ள வாரகம்பா அணை நிரம்பி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
எனினும், இதுவரை எந்தவொரு இறப்பும் பதிவாகவில்லை. ஆனால் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர் மற்றும் நாடு முழுவதும் பலத்த மழை பெய்த பின்னர் துருப்புக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
புதன்கிழமை மழை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் வெள்ள அச்சுறுத்தல் நீடிக்கும் என்று பிரதமர் கூறினார்.