அவுஸ்ரேலியாவின் புதிய ஆளுநர் நாயகமாக இராணுவத் தலைவர்!

அவுஸ்ரேலியா தனது அடுத்த ஆளுநர் நாயகமாக புகழ்பெற்ற இராணுவத் தலைவர் ஒருவரை நியமித்துள்ளது. இவர் பிரித்தானிய மகாராணியின் பிரதிநிதியாகவும், நாட்டின் மேலதிக தலைவராகவும் செயற்படுவார்.

எதிர்வரும் 2019ஆம் ஆண்டு மே மாதம் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக இந்த நியமனம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்த பிரதமர் ஸ்கொட் மொரிசன், முன்னாள் பாதுகாப்பு படைகளின் தலைவரும், தற்போதைய நியுசவுத் வேல்ஸின் ஆளுநருமான டேவிட் ஹார்லி, அவுஸ்ரேலியாவின் புதிய ஆளுநர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தற்போது பதவியில் உள்ள ஆளுநர் நாயகமாக சேர் பீட்டர் கொஸ்குரோவ், அவரது ஐந்தாண்டு கால பதவியை எதிர்வரும் மார்ச் மாதத்துடன் நிறைவு செய்து கொள்கிறார்.

இதேவேளை, புதிதாக ஆளுநர் நாயகமாக தெரிவான 62 வயதான ஹார்லி, அவுஸ்ரேலிய இராணுவ படைப்பிரிவுகளில் சுமார் 42 ஆண்டுகள் பணியாற்றியுள்ளதுடன், கடந்த 2011ஆம் ஆண்டு பாதுகாப்பு படைகளின் தலைவராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !