அவுஸ்ரேலியாவிடம் வீழ்ந்தது இலங்கை!

23 வயதுக்கு உட்பட்ட மூன்றாவது ஆசிய கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை அணி அவுஸ்ரேலிய அணியிடம் தோல்விடைந்துள்ளது.
அவுஸ்ரேலியாவை எதிர்கொண்ட இலங்கை அணி முதல் சுற்றில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அவுஸ்ரேலியாவுடன் நேருக்கு நேர் போட்டியிட்ட இலங்கை வீரர்கள் 25 புள்ளிகளுக்கு மேல் பெற்றிருந்தனர்.
எனினும் கடைசி வரை நீடித்த கடும் போட்டிக்குப் பின் இலங்கை வீரர்கள் 29-27 என்ற புள்ளிகளால் முதல் சுற்றை இழந்தனர்.
இலங்கை வீரர்களிடம் முதல் சுற்றில் இருந்த உற்சாகம் இரண்டாவது மற்றும் மூன்றாவது சுற்றுகளில் காணமுடியவில்லை.
இதனால் அந்த இரண்டு சுற்றுகளிலும் எதிரணிக்கு சவால் கொடுக்கும் அளவுக்கு போட்டி ஒன்றை வெளிப்படுத்த அவர்களால் முடியாமல்போனது.
இதனால் இரண்டாவது சுற்றிலும் 25-17 என்ற புள்ளிகளால் அவுஸ்ரேலியா வெற்றியீட்டியது.
அத்துடன், மூன்றாவது சுற்றையும் அவுஸ்ரேலிய அணி 27-14 என்று புள்ளிகளால் இலகுவாக கைப்பற்றியது.
பகிரவும்...