அவுஸ்ரேலியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

அவுஸ்ரேலியாவில் நோய்த்தாக்கம் ஒன்று ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Thunderstorm ஆஸ்துமா எனப்படும் கொடிய ஆஸ்துமா நோய்த்தாக்கமே இவ்வாறு ஏற்படவுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிகரித்துவரும் வெப்பநிலையோடு காற்றில் மகரந்த துணிக்கைகளின் செறிவும் கூடும்போது குளிர்காற்றும் சேர்ந்துகொண்டால் இந்த நோய் தாக்கும் அபாயம் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே பல சுகாதார அமைப்புக்கள் அங்கு வாழும் மக்களுக்கு அறிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது அவுஸ்ரேலியா முழுவதும் சீரற்ற காலநிலையும் காற்றும் அதிகரித்துவருகின்றது.

இது thunderstorm ஆஸ்துமா தாக்குதலை மீண்டும் ஏற்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது. காலநிலை மாற்றங்களினால் ஏற்படுகின்ற சுமார் இரண்டாயிரம் நோய்த்தாக்கங்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பொதுமக்களின் சுகாதார சிக்கல்களும் அவற்றின் மீதான ஆராய்ச்சியும் என்ற தலைப்பில் இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையிலேயே குறித்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !