Main Menu

அவுஸ்திரேலிய காட்டுத் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர 3 ஆயிரம் படை வீரர்கள் அழைப்பு!

அவுஸ்திரேலியாவில் பரவி வரும் காட்டுத்தீயை அனைப்பதற்கு 3 ஆயிரம் படை வீரர்களை அழைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மொரிசன் தெரிவித்தார்.

அஸ்திரேலியாவின் தெற்கு , நியூசவுத் வேல்ஸ், விக்டோரியா கடற்கரையையொட்டிய பகுதிகளில் காட்டுத் தீ மிகவும் வேகமாக பரவி வருகிறது.

விக்டோரியா மாகாணத்தில் தீ பரவி வருகின்ற நிலையில் அப் பகுதிகளில் வசிக்கின்ற சுமார் 1 லட்சம் பேர் வரை வெளியேறுமாறு அந்நாட்டு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அத்தோடு குறித்த காட்டுத் தீயில் சிக்கி இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையிலேயே தீயை கட்டுக்குள் கொண்டு வர சுமார் 3 ஆயிரம் படை வீரர்களை அந்நாட்டு பிரதமர் அழைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.