அவுஸ்திரேலியாவின் சிட்னியில் ஏற்பட்ட பாரிய தீ

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் ஏற்பட்ட பாரிய தீப்பரவல் சம்பவத்தில் பல வர்த்தக நிலையங்களும் தொழிற்சாலை கட்டிடம் ஒன்றும் தீக்கிரையானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சனிக்கிழமை  காலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் உயிர்ச் சேதங்களோ, காயங்களோ ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை.

சுமார் 100 தீயணைப்பு படை வீரர்கள் தீயணைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

தீயின் காரணமாக தொழிற்சாலை கட்டிடங்களுக்குள் உள்ள போத்தல்களும், பிற பொருட்களும் வெடித்துச் சிதறுவதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

https://www.heraldsun.com.au/9a615bf2-5fc0-438f-b55d-9d60e4b74b53


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !