Main Menu

அவசர உதவி கோரும் இரு கண்களின் பார்வையையும் இழந்த பாதிக்கப்பட்டவர்!

கந்தையா சிவானந்தன்,
தே.அ.அ.இல: 731394466V
மூங்கிலாறு வடக்கு,
உடையார்கட்டு, புதுக்குடியிருப்பு.
மேலே குறிப்பிட்டுள்ள முகவரியில் வசித்து வரும் கந்தையா சிவானந்தன் ஆகிய நான், 1988ம் ஆண்டு புலிகள் அமைப்பில் இணைந்து 1990ம் ஆண்டு முல்லைத்தீவு பகுதியில் நடைபெற்ற சண்டையில் இரு கண்களின் பார்வையையும் இழந்து 2009ம் ஆண்டு யுத்தம் முடியும் வரை அமைப்பில் இருந்தேன்.
1999ம் ஆண்டு திருமணம் முடித்த எனக்கு 3 பிள்ளைகள் (இரு பெண் பிள்ளைகள், 1 ஆண் பிள்ளை) உள்ளனர். மூத்த பிள்ளைக்கு 13 வயது. (மனைவியும் அரசியல்துறை பிரிவு போராளியாவார்.)
மாதாந்தம் எமக்கு கிடைக்கும் 450 ரூபா பிச்சை சம்பளத்திலேயே நாம் ஐந்து பேரும் சீவியம் நடத்தி வருகின்றோம். அத்துடன் வேறு தேவைகளை பூர்த்தி செய்ய வாழைத்தோட்டம் வைத்திருந்தேன். தற்போது வறட்சி காரணமாக கிணற்றிலும் தண்ணீர் முற்றாக வற்றி விட்டது. பிள்ளைகளை படிப்பிக்க முடியாத வறுமை நிலையில் மிகவும் கஸ்டப்பட்டு வருகின்றோம்.
காலையும் மதியமும் மட்டுமே எல்லோரும் சாப்பிடுவோம். இரவில் நானும் மனைவியும் சாப்பிடாமல் பட்டினி கிடந்து கொண்டு பிள்ளைகளுக்கு சாப்பிடக்கொடுப்போம்.
எனவே எமது பிள்ளைகளின் எதிர்காலம் கருதி அவர்களின் படிப்பு பராமரிப்பு செலவுகளை கவனிக்க சுயதொழில் ஒன்றை ஏற்படுத்தி தருமாறு தங்களை நன்றியுணர்வுடன் கேட்கின்றேன்.
தோட்டம் செய்து புழைக்கக்கூடியவாறு கிணற்றை ஆழப்படுத்தி புனரமைத்து தருமாறும், பசுமாடு ஒன்றை கொள்வனவு செய்து தருமாறும் தங்களை அன்புடன் வேண்டுகின்றேன்.
இப்படிக்கு,
கந்தையா சிவானந்தன்,
தொலைபேசி இலக்கம்: +094 77 5310 441
123
132
142