அல்பேனியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
ஐரோப்பிய நாடான அல்பேனியாவில் உணரப்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக 50 பேரிற்கும் மேல் காயமடைந்துள்ளனர்.
டிரானா மற்றும் துறைமுக நகரமான டர்ரஸ் ஆகிய பகுதிகளில் 5.6 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் காரணமாக அதிகளவான கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காயமடைந்த பொதுமக்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நிலநடுக்கம் காரணமாக அச்சமடைந்த பொதுமக்கள் வீதிகளிலும், பூங்காக்களிலும் இரவுப் பொழுதைக் கழித்துள்ளனர்.
கடந்த 30 ஆண்டுகளில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கம் இதுவென தெரிவிக்கப்படுகின்றது.
பகிரவும்...