அல்ஜீரிய ஜனாதிபதி தேர்தல் பிற்போடப்பட்டது…

அல்ஜீரிய ஜனாதிபதி அப்தலசீஸ் பூத்தபீலிகா ஏப்ரல் 18-ம் திகதி நடைபெறவிருந்த ஜனாதிபதித் தேர்தலை தள்ளி வைத்துள்ளதுடன் ஐந்தாவது முறையாக தான் தேர்தலில் போட்டியிடமாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஜனாதிபதி பூத்தபீலிகா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்ததையடுத்து கடந்த சில வாரங்களாக அல்ஜீரியாவில் போராட்டங்கள் வெடித்திருந்த நிலையில் தற்போது அவர் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

கடந்த 20 ஆண்டுகளாக அல்ஜீரியாலி ஜனாதிபதியாக செயற்பட்டு வரும் அவர் 2013-ல் பக்கவாதம் தாக்கியதன் பின்னர் அரிதாகவே பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகின்றார்.

இந்தநிலையில் ஜனாதிபதி பூத்தபிலிக்கா பெயரில் வெளியிடப்பட்ட அறிக்கையில், புது தேர்தலுக்கான திகதிகள் இதுவரை முடிவு செய்யப்படவில்லை எனவும் அமைச்சரவை மாற்றம் மிக விரைவில் நடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தேர்தல் தள்ளி வைக்கப்படும் சூழலில் ஜனாதிபதி பதவியை விட்டு விலகுவாரா என்பது குறித்த கேள்விகளுக்கு அவரது அறிக்கையில் விளக்கமளிக்கபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இNதுவேளை அல்ஜீரியாவில் பிரதமர் அஹமத் ஓயாஹியா பதவிவிலகுவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதையடுத்து உள்துறை அமைச்சர் நூறுடீன் பெடோய் புதிய அரசை அமைக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !