அறிவுரை கூறி பிடுங்கிய செல்போனை திருப்பி கொடுத்த அஜித்
வாக்களிக்க வந்த தன்னுடன் செல்பி எடுக்க முயன்ற நபரின் செல்போனை பிடுங்கி அறிவுரை கூறி திருப்பி கொடுத்து இருக்கிறார் நடிகர் அஜித்குமார்.
அஜித்தமிழக சட்டசபைக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திரைப்பிரபலங்கள், பொதுமக்கள் பலரும் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.
நடிகர் அஜித், தனது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் மக்களோடு மக்களாக வரிசையில் காத்திருந்து வாக்களித்தார். அப்போது ரசிகர் ஒருவர் செல்பி எடுக்க முயற்சி செய்தார். இதைப் பார்த்து கோபமடைந்த அஜித் அவரது செல்போனை பிடுங்கிக் கொண்டார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், பிடுங்கிய செல்போனை ரசிகரிடம் திருப்பிக் கொடுத்த நடிகர் அஜித், மாஸ்க் போடு என்று அறிவுரை கூறியிருக்கிறார்.