அறிவிப்பாளர் திலகம் A.S ராஜா அவர்கள் காந்தக்குரலோன் விருது வழங்கி கௌரவிப்பு

பாரீஸ் பன்னாட்டு உயர் கல்வி நிறுவனம் நடாத்திய 3 வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாட்டில், எமது TRT தமிழ் ஒலி வானொலியில் அன்றிலிருந்து இன்று வரை எம்முடன் பணியாற்றும் மூத்த அறிவிப்பாளர், அறிவிப்பாளர் திலகம் A.S ராஜா (திரு.அ.சிறீஸ்கந்தராஜா) அவர்கள் “காந்தக்குரலோன்” என்னும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். இந்த விருதினை அவரின் சேவைக்கும் கடமை உணர்வுக்கும் கிடைத்த வெகுமதியாக கருதி, அவரை நாமும் அன்பு நேயர்களும் இணைந்து பாராட்டுகின்றோம்.

தொடர்பு பட்ட செய்தியை பார்வையிட இங்கே Click செய்யவும்

மேலும் அவர் தொடர்ந்தும் பல விருதுகளை வெல்ல வாழ்த்தும் இந்த வேளையில், திரு.A.S.ராஜா அவர்களை வாழ்த்தி இன்றைய அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகிறார் லண்டனிலிருந்து Dr.ரவி அவர்கள். அவருக்கும் எமது நன்றி.

அத்துடன் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை செப்டெம்பர் மாதம் 16ம் திகதி திரு.திருமதி. ஸ்ரீஸ்கந்தராஜா (A.S.ராஜா) புவிராணி தம்பதிகள் தமது திருமண நாளை இனிதே கொண்டாடும் இந் நன்னாளில் சகல வளங்களும் பெற்று பல்லாண்டு காலம் பலரும் போற்றும் தம்பதிகளாக உடல் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டுமெனவும் வாழ்த்துகிறோம்.« (முந்தைய செய்திகள்)© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !