அறிமுக டெஸ்ட் போட்டியில் இந்தியாவுடன் மோதுகிறது ஆப்கானிஸ்தான்

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று சிறப்பாக விளையாடி வரும் ஆப்கானிஸ்தான், அயர்லாந்து கிரிக்கெட் அணிகளுக்கு ஐ.சி.சி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடந்த 2017 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட அங்கீகாரம் அளித்தது.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், அந்நாட்டுடன் டெஸ்ட் போட்டி விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் சம்மதம் தெரிவித்தது. இதன்படி வரும் ஜூன் 14 ஆம் தேதி முதல் 18  ஆம் தேதி வரை ஆப்கானிஸ்தான் – இந்தியா இடையே ஒரே ஒரு டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. பெங்களூருவில் இந்த போட்டி  நடைபெறுகிறது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !