அர்ஜுனின் மகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி
ஆக்ஸன் கிங் அர்ஜுனின் மகள் நடிகை ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக அவர் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவில், “சமீபத்தில் எனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. மருத்துவக் குழுவினர் அளித்த ஆலோசனையின்படி வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன்.
கடந்த சில நாட்களாக என்னோடு தொடர்பில் இருந்தவர்கள் கொஞ்சம் உங்களை பார்த்துக் கொள்ளுங்கள். எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள், தயவுசெய்து முகமூடி அணியுங்கள்! அன்புடன் ஐஸ்வர்யா அர்ஜுன்’ என்று பதிவிட்டுள்ளார்.
இவர் இந்திய நடிகரான அர்ஜூனின் மகளான ஐஸ்வர்யா, தமிழ் திரையுலகில் பட்டத்து யானை என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக 2013ல் அறிமுகம் ஆனார்.
அதன்பின்னர் சந்தன் குமார் ஜோடியாக இரண்டாவது படமான சொல்லிவிடவா படத்தில் நடித்தார். இந்தப் படத்தை அர்ஜுன் இயக்கி இருந்தார். இந்தப் படம் பிரேமா பரஹா என்ற தலைப்பில் கன்னடத்திலும் வெளியானது.
ஐஸ்வர்யா அர்ஜுனின் உறவினர் துருவ் சர்ஜா கொரோனாவால் பாதிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பின்னர் ஐஸ்வர்யா அர்ஜூன் குறித்த செய்தி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.