அருள் மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமிக்கு மகோற்சவ பெருவிழா

முருகன் அடியார்களே!

நிகழும் மங்களகரமான விளம்பி வருடம் வைகாசி திங்கள் 11ம் நாள் (25.05.2018) வெள்ளிக்கிழமை முதல் வைகாசி திங்கள் 22ம் நாள் (05.06.2018) செவ்வாய்க்கிழமை வரை St.Margrethen பதியில் கோவில் கொண்டு வேண்டுவோர் வேண்டுவதை வழங்கி அடியார்களுக்கு அருள் பாலித்துக் கொண்டிருக்கும் அருள் மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமிக்கு மகோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 12 நாட்கள் மகோற்சவத்திருவிழா ஆலயத்தில் சிறப்பாக நடைபெற திருவருள் கூடியுள்ளது.

அடியார்கள் இவ் உற்சவ தினங்களில் ஆசார சீலர்களாக வருகை தந்து முருகப்பெருமானுக்கு நடைபெறும் அபிஷேகம் திருவிழாக்களில் கலந்து கொண்டு முருகப்பெருமான் அருள் பெற்று நாமும் நம் தாயக மக்களும் முருகன் அருளால் மகிழ்வுடன் வாழ பிரார்த்திக்கும் வண்ணம் கேட்டுக்கொள்கிறோம்.« (முந்தைய செய்திகள்)
(மேலும் படிக்க) »© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !