அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கிய பாதுகாப்பைத் திரும்பப் பெற்றது பஞ்சாப் காவல்துறை

டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கிய பாதுகாப்பை பஞ்சாப் காவல்துறை நீக்கியுள்ளது.
கெஜ்ரிவாலுக்கு பஞ்சாப் மாநில காவல்துறை வழங்கும் பாதுகாப்பைத் திரும்பப் பெற உத்தரவிட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் டெல்லி காவல்துறை முறைப்பாடு அளித்திருந்தது.
அதனைத் தொடர்ந்து கெஜ்ரிவாலுக்கு வழங்கி வரும் பாதுகாப்பை பஞ்சாப் மாநில காவல்துறை திரும்பப் பெற்றுள்ளது.
டெல்லி மாநில சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் 5 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இதற்கான தேர்தல் பிரசாரத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லியின் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் ஈடுபட்டு வரும் நிலையில் அவருக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.