அரச மரக் கூட்டுத் தாபனத்தின் முன்னாள் தலைவர் கைது!

அரச மரக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் அநுருத்த பொல்கம்பொல குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

8 மில்லியன் பண மோசடி தொடர்பில் நீதிமன்றில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் நீதிமன்றில் ஆஜராகாத நிலையிலேயே நேற்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் அரச மரக்கூட்டுத்தாபனத்தின் தலைவராக அநுருத்த பொல்கம்பொல ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டு பின்னர் அவர் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !