அரசே பழுதுபட்டு உள்ளது – கமலஹாசன் குற்றச்சாட்டு
அரசே பழுது பட்டு இருப்பதாகவும் டெல்லியில் இருந்து ஜெனரேட்டர் வைத்தாலும் மீட்டெடுக்க முடியாது என்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரை அரசு மருத்துவமனையில் மின் தடையால் 5 பேர் இறந்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த போது இதனை தெரிவித்தார். சூலூர் தொகுதியில் கமல்ஹாசன் பிரச்சாரத்தில் ஈடுபட தடை கோரி மக்கள் நீதி மய்யம் கட்சி உறுப்பினர் மனைவி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், அதில் வேறு கட்சிகளின் தலையீடு இருப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.