அரசியல் சமூகமேடை – 28/03/2019
தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப்புலிகள் பாவித்த கட்டடம் மற்றும் காணியை மீளவும் கோர முடியாது என வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்த கருத்துக்கள் .
போர்க்குற்றம் இழைத்த இராணுவ அதிகாரிகளுக்குத் தண்டனை வழங்கி அவர்களை உடன் சிறையில் அடைக்கவேண்டும் அரசு. அப்போதுதான் ஐ.நாவின் பிடியிலிருந்து இலங்கை தப்பித்துக்கொள்ளலாம் என ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா.. இலங்கை அரசுக்கு அறிவுரை வழங்கியுள்ளமை
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்தமை தொடர்பில் கோத்தபாய மீது குற்றம் சுமத்தி அமெரிக்க நீதிமன்றத்தில் சிங்கள ஊடகவியாளர்களால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை
ஜெனீவாவில் உள்ள இலங்கைத் தூதுவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் கைச்சாத்திட்டுள்ளதைத் தான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இது, முப்படையினர், அரசாங்கம் மற்றும் மக்களை காட்டிக்கொடுத்த செயலாகும் என்றும் தெரிவித்துள்ளது .
இந்த விடயங்கள் தொடர்பாக கருத்துக்கள்