அரசியல் கைதிகள் விடுதலையை வலியுறுத்தி ஐ.நா சபைக்கு மகஜர்!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அழுத்தத்தினை பிரயோகிக்க வேண்டும் என வலியுறுத்தி ஐ.நா. சபைக்கு மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கி.கிருஸ்ணமீனன் உள்ளிட்ட நடைப் பயணப் போரட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் இன்று (திங்கட்கிழமை) ஐ.நா.வின் யாழ்ப்பாண அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்று மகஜரைக் கையளித்தனர்.

இதன்போது யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட விடுதலைக்கான நடை போராட்டத்தின் ஊடக அறிக்கையும், அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்தில் ஐ.நா சபை இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தத்தினை பிரயோகிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படும் மகஜரும் கையளிக்கப்பட்டது.

கடந்த சனிக்கிழமை நடைப்பயணம் முடிவுற்ற அன்று அலுவலக நாள் இல்லாத காரணத்தால் அனுராதபுரத்தில் உள்ள ஐ.நா அலுவலகத்தில் மகஜரை கையளிக்க முடியவில்லை.

இதன் காரணமாக இன்றைய தினம் மாலை 4.00 மணியளவில் யாழ் நாவலர் வீதியில் அமைந்துள்ள ஐ.நா அலுவலகத்தில் மகஜர் கையளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !